ஸ்ரீநகரில் உள்ள தாகூர் ஹாலில் ‘ஜஷன்-இ-காஷ்மீர்’ கலாசாரவிழா சிறப்பாக நிறைவடைந்துள்ளது.
ஷா கலந்தர் நாட்டுப்புற கலையரங்கம் மற்றும், கலை, கலாசாரம் மொழிகளுக்கான கல்லூரியுடன் இணைந்து இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழாவில், ஜம்மு- காஷ்மீர் வக்பு சபையின் தலைவர் டெரக்ஷன் அன்ட்ராபி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அதேநேரத்தில் கலை, இலக்கியத்துடன் தொடர்புடைய ஆளுமைகள் மற்றும், பாடசாலை மாணவர்களின் பங்கேற்பும் காணப்பட்டது.
இந்த கலாசார விழாவில், 2,000 கலைஞர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் சார்பில் தனித்துவமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய வக்பு சபையின் தலைவர் ஆன்ட்ராபி, காஷ்மீரின் கலாசாரம் மற்றும் நாகரீகத்தை வளர்ப்பது மட்டுமல்லாமல், வளரும் கலைஞர்கள் தங்கள் கலையை வெளிப்படுத்த அனுமதிப்பதால் இதுபோன்ற கலாசார விழாக்கள் மிகவும் முக்கியமனது என்றார்.
ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் முழு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.
விழா இயக்குனர் குல்சார் அகமது பட் கூறுகையில், ‘ஜஷன்-இ-காஷ்மீர்’ இரண்டாம் கட்டம் ஜம்முவில் நடைபெறும் என்றும், அதன் இறுதிப் போட்டி ஜனவரி 23 ஆம் திகதி புதுடில்லியில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார்.