எகிப்து, ருமேனியா, இலங்கை, துருக்கி, செக் குடியரசு, பாகிஸ்தான் மற்றும் ஹங்கேரி ஆகிய ஏழு நாடுகள் இப்போது நாணய நெருக்கடியின் அதிக ஆபத்தில் இருப்பதாக ஜப்பானின் சிறந்த தரகு மற்றும் முதலீட்டு வங்கியான நோமுரா எச்சரித்துள்ளது.
ஜப்பானிய வங்கியான நோமுரா 32 நாடுகளில் உள்ளதோடு கடந்த மே மாதத்திலிருந்து செக் குடியரசு மற்றும் பிரேசிலில் மிகப்பெரிய பணவீக்க அதிகரிப்புடன், நெருக்கடி அபாயம் அதிகரித்துள்ளதாகக் கூறியது.
குறிப்பாக இது 1999 ஜூலைக்குப் பின்னர் ஏற்பட்ட ஆசிய நெருக்கடியின் அதியுச்சமாக பார்க்கப்படுகின்றது. ஒரு நாட்டின் அந்நியச்செலாவணிக் கையிருப்பு சதவீதம், நிதி ஆரோக்கியம் மற்றும் வட்டி வீதங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே நோமுரா தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.
1996 முதல் வெவ்வேறு நாணய நெருக்கடிகளின் தரவுகளின் அடிப்படையில், நோமுரா மேற்கொண்ட ஆய்வில் எகிப்து, ஏற்கனவே இந்த ஆண்டு இரண்டு முறை தனது நாணய மதிப்பை பெருமளவில் குறைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நாடியது, இப்போது பட்டியலில் 165 என்ற மோசமான மதிப்பெண்ணை பெற்றுள்ளது.
145 இல் அடுத்த இடத்தில் உள்ள ருமேனியா, வெளிநாடுகளின் தலையீடுகளுடன் அதன் நாணயத்தை உயர்த்துகிறது. இயல்புநிலை பாதிக்கப்பட்ட இலங்கை மற்றும் துருக்கி ஆகிய இரண்டும் 138 மதிப்பெண்களை பட்டியலில் மிக பிந்திய இடத்தில் உள்ளது, அதேநேரத்தில் செக் குடியரசு, பாகிஸ்தான் மற்றும் ஹங்கேரி ஆகியவை முறையே 126, 120 மற்றும் 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.