சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 18 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
இன்று (திங்கட்கிழமை) ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் குறித்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர்.
குறித்த நிகழ்வுகளில் ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என அனைவரும் இதில் கலந்துக்கொண்டிருந்தனர்.