சீனாவிலிருந்து 2 நாட்களுக்கு முன் இந்தியா திரும்பிய, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமை மருத்துவ அதிகாரி ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 23ம் திகதி சீனாவிலிருந்து, இந்தியா திரும்பியுள்ளார்.
ஆக்ரா விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு, தனியார் ஆய்வகத்தில் கொரோனா . பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள், மரபணுப் பரிசோதனைக்காக லக்னோவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரிடமும் பரிசோதனை நடத்த சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
ஆக்ரா மாவட்டத்தில் நவம்பர் 25-ம் திகதிக்குப் பிறகு கண்டறியப்படும் முதல் கொரோனா . பாதிப்பு இதுவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.