ஜப்பான் – இந்திய புல்லட் ரயில் திட்டம் நிறைவடையும்போது அதிவேக ரயில் புரட்சியை ஏற்படுத்தும் என இந்தியாவுக்கான ஜப்பான் தூதுவர் ஹிரோஷி சுசுக்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த அதிவேக ரயில் திட்டத்திற்காக இந்தியா மற்றும் ஜப்பான் ஊழியர்கள் ஓர் அணியாக உற்சாகத்துடன் செயற்படுவதை அவர் வரவேற்றுள்ளார்.
மும்பை – அஹமதாபாத் அதிவேக ரயில் திட்டத்திற்கு ஜப்பான் அரசு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.