பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரா்களுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
1000 ரூபாயுடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சா்க்கரையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் பல துயரங்களைச் சந்தித்து வரும் நிலையில் இந்த தொகை போதுமானது அல்ல என்றும் கூறியுள்ளார்.
பொங்கல் பரிசை குறைவாக அறிவித்திருப்பது ஏழை எளிய மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் விஜயகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே தமிழக அரசாங்கம் இந்த தொகையை மறு பரிசீலனை செய்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.