சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க தென் கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனவரி 5ஆம் திகதி முதல், சீனாவில் இருந்து தென் கொரியாவிற்கு வரும் பயணிகள், புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட PCR சோதனை அறிக்கை அல்லது அன்டிஜென் சோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவை அடைந்த 24 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ளன.