புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரெமித பண்டார தென்னகோன் ஆகியோருக்கிடையில் சினேகபூர்வ கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
கொழும்பில் உள்ள இராஜாங்க அமைச்சரது அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது வைஸ் அட்மிரல் பெரேரா கடற்படை தளபதி என்ற வகையில் அவர் மேற்கொள்ளும் அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் இராஜாங்க அமைச்சர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மேலும், இராஜாங்க அமைச்சர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் – பாதுகாப்பு ஹர்ஷ விதானாரச்சியும் கலந்துகொண்டார்.
வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 25ஆவது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் டிசம்பர் 18ஆம் திகதி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














