சீனாவில் புதிய கொவிட் மாறுபாடு தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள், சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொவிட் பரிசோதனையை அறிவித்துள்ளன.
சீனாவில் இருந்து பிரான்சுக்குப் பறக்கும் பயணிகள், புறப்படுவதற்கு முன் 48 மணி நேரத்திற்கும் குறைவான கொவிட் பரிசோதனையை முன்வைக்க வேண்டும் என்று பிரான்ஸ் அரசாங்கம் தெரிவிததுள்ளது.
ஸ்பெயினுக்கு வருபவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தால் சோதனைகளைத் தவிர்க்கலாம். மேலும் ஸ்பெயின் சில சீன தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்கிறது.
கடந்த 2020ஆம் மார்ச் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக அடுத்த வாரம் தனது எல்லைகளை முழுமையாக மீண்டும் திறக்கும் என சீனா அறிவித்துள்ள நிலையில், பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
பிரித்தானியா, தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள், நேற்று (வெள்ளிக்கிழமை) புதிய சோதனை விதிகளை அறிவித்தன, அதே நேரத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் ஏற்கனவே கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
‘தேசிய அளவில், நாங்கள் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை செயல்படுத்துவோம், மேலும் சீனாவிலிருந்து வரும் பயணிகள் எதிர்மறையான கோவிட் பரிசோதனையை முன்வைக்க வேண்டும் அல்லது முழுமையாக தடுப்பூசி போட வேண்டும்’ என்று ஸ்பெயின் சுகாதார அமைச்சர் கரோலினா டேரியாஸ் கூறினார்.
இந்த நடவடிக்கைகள் எப்போது நடைமுறைக்கு வரும் என்று பிரான்ஸோ அல்லது ஸ்பெயினோ குறிப்பிடவில்லை.
எவ்வாறாயினும், அரசாங்கம் ஒரு ஆணையை வெளியிட்டு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு அறிவிக்கும் என்று பிரான்ஸ் சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சகங்கள் தெரிவித்தன.