தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து ஒரு தொகுதி ஐஸ் போதைப்பொருள் பேசாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) தலைமன்னாரில் இருந்து இரவு 7.30 மணியளவில் அரச பேரூந்து பயணிகளுடன் கொழும்பு நோக்கி பயணித்தது.
இதன் போது பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போலீசார் குறித்த பேரூந்தை இடை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன் போது குறித்த பேருந்தின் பின் ஆசனத்தின் இருக்கையின் கீழ் காணப்பட்ட பொதி ஒன்றை மீட்டு சோதனை செய்த போது ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை மீட்கப்பட்டுள்ள ஐஸ் போதைப்பொருள் சுமார் 95 கிராம் நிறையுடையது என பேசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் பேருந்தில் பயணித்த பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் பயணங்களை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.