ரஷ்ய ஆக்கிரமிப்பு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள மகிவிகாவில் புத்தாண்டு தினத்தன்று 400 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
ஒரு அரிய நடவடிக்கையில், ரஷ்ய சார்பு அதிகாரிகள் உயிரிழப்புகளை ஒப்புக்கொண்டனர். ஆனால் இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்த ரஷ்யா மறுத்துவிட்டது.
உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, 2023ஆம் ஆண்டு உக்ரைனுக்கு வெற்றி மற்றும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என கூறியதையடுத்து இந்த செய்தி வந்துள்ளது.
ரஷ்ய தொலைக்காட்சியில் புத்தாண்டு உரையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யா தனது இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை எதிர்த்து போராடும் என கூறினார்.
ரஷ்யாவில் இருந்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் சமீபத்திய அலை தொடர்ந்ததால், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கிய்வில் விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன.
நள்ளிரவுக்கு சற்று முன் தொடங்கிய தாக்குதல், முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டதாக கிய்வ் பிராந்திய ஆளுனர் ஒலெக்ஸி குலேபா தெரிவித்தார்.
அழிக்கப்பட்ட ரஷ்ய ஆளில்லா விமானத்தின் குப்பைகளால் கிய்வில் ஒருவர் காயமடைந்தார் என்று தலைநகரின் மேயர் கூறினார்.