கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்ய அரசாங்கத்திடம் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் கிடையாது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஆகையால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இம்மாதம் கிடைப்பது சாத்தியமற்றது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் வரலாற்றில் முதல் முறையாக மக்களின் மாபெரும் எழுச்சி போராட்டத்தினால் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதாக கூறினார்.
ஜனநாயகத்திற்கு எதிராக அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்களினால் இலங்கைக்கு எதிராக சர்வதேசம் கடுமையான தீர்மான்களை எடுத்தது என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஆகவே கடந்த ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கு அரசாங்கம் இவ்வருடத்தில் எவ்வாறு தீர்வு காணும் என்பது நாட்டு மக்களின் கேள்வி என்றும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.