உத்தேச மின்சார கட்டண உயர்வை முன்னெடுப்பதற்கு இது பொருத்தமான தருணம் அல்ல என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2023 புத்தாண்டில் இன்று(திங்கட்கிழமை) காலை தமது கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுதந்திரத்தை இல்லாமல் செய்ய அரசியல் அதிகாரம் பல தடவைகள் முயற்சித்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டினால், அந்த முடிவை நிராகரிக்க தயங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி கட்டண உயர்வு கோரப்பட்டால், அது பரிசீலிக்கப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒரு சவாலான தருணத்தில் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.