உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆராய்வதற்காக இன்று (வியாழக்கிழமை) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்கள் கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் ஒன்றுக்கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன். எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு இ.தொ.கா கேட்டுக்கொண்டுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக் கோரலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அழைப்பு விடுத்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.