2023ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (வியாழக்கிழமை) காலை 9.30மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதன்போது புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், குத்தகைக்கு விடப்பட்ட இடங்களை மீள சுவீகரிக்கும் சட்டமூலம் மற்றும் சபை ஒத்திவைப்பு தொடர்பான விவாதம் என்பன நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த மாதம் 12ஆம் திகதி பிரதி சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூடி எடுத்த தீர்மானத்துக்கு அமையவே இன்று நாடாளுமன்ற கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.