புனித நகரத்தின் சொற்பொழிவுகளில் கலந்துகொள்வதற்காக புத்த கயாவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கையின் உயர்மட்ட பௌத்த பிக்குகளின் தூதுக்குழுவானது இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான பௌத்த தொடர்புகளை நினைவு கூர்ந்துள்ளது.
அவர்களின் ஐந்து நாள் ஆன்மீக விஜயத்தில் சொற்பொழிவுகள் மற்றும் தர்ம பேச்சுக்கள் இடம்பெற்றன.
அஸ்கிரிய பீடாதிபதி முருத்தேனிய தம்மரதன தேரர் குறித்த புனிதப் பயணம் தொடர்பில் கூறுகையில், ‘அசோக சக்கரவர்த்தியின் மகன் அரஹத் மஹிந்த இலங்கைக்கு புத்த மதத்தை அறிமுகப்படுத்தியதை நாம் அறிவோம்.
அன்று முதல் இன்று வரை இலங்கையில் பௌத்தமே பிரதான மதமாக உள்ளது’ என்றார்.
அத்துடன், ‘பௌத்த மதத்தை மட்டுமல்ல, அவர் மூலம் நிறைய விடயங்களைப் பெற்றோம், குறிப்பாக எங்களுக்கான மதம் மற்றும் எங்களுக்கான கல்வி மற்றும் பிற நுட்பங்கள் அவற்றுள் முக்கியமானவை.
பௌத்தத்திலிருந்து நாங்கள் நிறைய விடயங்களை அறிந்துள்ளோம். எனவே அவ்விமான நிலைமை ஏற்பட்டதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
மேலும் இந்தியாவை எப்போதும் ஒரு பௌத்த தாய்நாடாகவும் மிக அண்மையில் உள்ள எங்களுடை சகோதர நாடாகவும் மதிக்கிறோம். இலங்கையின் மூத்த சகோதரன், ஏனென்றால் அது இந்தியா தான்.
அது எப்போதும் எங்களுக்கு உதவிகளை வழங்கி வந்துள்ளது, தற்போதும் எமக்கு பொருளாதார சிக்கல்கள் உள்ளதை உணர்ந்து உதவிகளை வழங்கி வருகின்றது என்றுமே மறக்க முடியாது’ என்று குறிப்பிட்டார்.
இந்த விஜயத்தின்போது, இலங்கையில் உள்ள புகழ்பெற்ற மடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்த சங்க உறுப்பினர்கள் புத்த கயாவில் புனித தலாய் லாமாவின் மூன்று நாள் புனித போதனைகளும் கலந்து கொண்டனர்.