சிங்கப்பூரின் பொருளாதாரம் கடந்த 2022ஆம் ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சியைக் கண்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 3.8 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஆரம்ப புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
எவ்வாறாயினும், ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் முக்கிய உற்பத்தித் துறையில் வளர்ச்சி 3.0 சதவீதம் சுருங்கியது.
நான்காவது காலாண்டில் வளர்ச்சி 2.2 சதவீதமாக இருந்தது, இது ஜூலை-செப்டம்பரில் 4.2 சதவீதமாக இருந்தது.
அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வட்டி வீதங்களில் கூர்மையான அதிகரிப்பு ஆகியவற்றால் ஏற்படும் மென்மையான உலகளாவிய தேவையால் கணினி சிப்கள் மற்றும் பிற தயாரிப்புகளுக்கான ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
2023 உலகப் பொருளாதாரத்திற்கு கடினமான ஆண்டாக இருக்கும் எனவும் மூன்றில் ஒரு பங்கு பொருளாதாரங்கள் மந்தநிலையில் இருக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தனது புத்தாண்டு செய்தியில் இந்த ஆண்டு வளர்ச்சி 0.5 முதல் 2.5 சதவீதம் வரை குறையும் என்று எச்சரித்தார்.