திருச்சியில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாவட்ட நிர்வாகம் நேரடியாக 500 டோக்கன்களை மட்டுமே வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் ஏற்பாட்டாளர்கள் டோக்கன்களை வழங்க முடியாது என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.