ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடுகள் கிடையாது என்றும் கொள்கை ரீதியில் மாத்திரம் வேறுபாடுகள் காணப்படுவதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் பண்டாரநாயக்கவின் கொள்கைகளை செயற்படுத்த முனைந்ததால் முரண்பாடுகள் தோற்றம் பெற்றன என்றும் அவர் தெரிவித்தார்.
சுதந்திர கட்சியில் நேற்று இடம்பெற்ற பண்டாரநாயக்கவின் 124 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்..
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பண்டாரநாயக்கவின் கொள்கையுடன் தீர்வு காண முடியும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
இதேநேரம் இளம் தலைமுறையினர் பண்டாரநாயக்கவின் கொள்கைகளை அறியாமல் இருப்பது பிறிதொரு பிரச்சினை என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.