தலைநகரை உலுக்கிய வன்முறையைத் தொடர்ந்து, பிரேஸில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, வன்முறையில் ஈடுபட்ட நாட்டின் ஜனாதிபதி தலைவர் ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்களை தண்டிப்பதாக சபதம் செய்துள்ளார்.
வெளியேற்றப்பட்ட தீவிர வலதுசாரி தலைவரின் ஆதரவாளர்களும் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.
ஆனால், பல மணி நேர மோதல்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை தலைநகர் பிரேசிலியாவில் உள்ள கட்டடங்களின் கட்டுப்பாடு பொலிஸாருக்;கு கீழ் வந்தது. இதன்பிறகு உச்ச நீதிமன்ற கட்டட சேதத்தை லூலா நேரில் பார்வையிட்டார்.
சுமார் 200 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் ஃபிளவியோ டினோ உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். தலைநகருக்கு எதிர்ப்பாளர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட சுமார் 40 பேருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லூலா பதவியேற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு வந்த மோதலை, கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர தலைநகருக்கு தேசிய காவலரை அனுப்புவதற்கு முன்பு, மூத்த இடதுசாரி தலைவர் பிரேஸில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, அவசரகால அதிகாரங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும், அரசு கட்டடங்கள் இருக்கும் பிரதான அவென்யூ உட்பட தலைநகரின் மையப்பகுதியை 24 மணி நேரத்திற்கு மூடவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் தேர்தலில் தோல்வியடைந்ததை ஏற்க மறுத்துவிட்ட 67 வயதான போல்சனாரோ, கடந்த வாரம் ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வில் கலந்துக்கொள்ளாமல் புளோரிடாவுக்கு சென்றார். தாக்குதலைக் கண்டித்து, வன்முறை வெடித்த ஆறு மணி நேரத்திற்குப் பிறகு ட்விட்டரில் ஒரு பதிவில் கலவரக்காரர்களை ஊக்குவித்ததற்கான பொறுப்பை அவர் மறுத்தார்.
இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில், பிரேஸிலின் உச்ச நீதிமன்றம் பிரேஸிலியாவின் கூட்டாட்சி மாவட்ட ஆளுநரான இபானிஸ் ரோச்சாவை நீக்கியது.