புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுபெறுமென மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திறப்பு விழாவை எப்போது நடத்துவது என்று ஆலோசித்துவரும் மத்திய அரசாங்கம், வரவு-செலவுத் திட்ட கூட்டத்தொடரை தற்போதைய கட்டடத்திலேயே நடத்துவதா அல்லது புதிய கட்டடத்தில் நடத்துவதா என்று விவாதித்து வருகின்றது.
ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஒரு அங்கமாக நாடாளுமன்றம் கட்டப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், இந்தியாவின் ஜனநாயக பெருமையை பறைசாற்றும் பிரமாண்டமான அரசியல் சட்ட மண்டபம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு அறைகள், நூலகம், நிலைக்குழு அறைகள், உணவு அருந்தும் பகுதி, விசாலமான வாகன நிறுத்த பகுதி ஆகிய வசதிகள் இடம்பெறுகின்றன.