சீனாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஹெனானில் கிட்டத்தட்ட 90 சதவீதம் மக்கள் இப்போது கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
மாகாண அதிகாரி கான் குவான்செங் ஊடக சந்திப்பில், சுமார் 88.5 மில்லியன் மக்கள் தொகையினர் கொவிட் தொற்றால் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், அனைத்து நோய்த்தொற்றுகளும் எப்போது நிகழ்ந்தன என்பதற்கான காலக்கெடுவை கான் குறிப்பிடவில்லை.
டிசம்பரில் பூஜ்ஜிய- கொவிட் கொள்கைகளை கைவிட்ட பிறகு, சீனா முன்னோடியில்லாத வகையில் தொற்று பாதிப்பினால் போராடி வருகிறது.
முடக்கநிலை, தனிமைப்படுத்தல்கள் மற்றும் வெகுஜன சோதனைகளுக்கு எதிரான அரிய எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஹெனான் மாகாண புள்ளிவிபரங்கள் மத்திய அரசின் கொவிட் புள்ளிவிபரங்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை
உத்தியோகபூர்வ தரவுகளின்படி, 1.4 பில்லியன் மக்கள் உள்ள நாட்டில் வெறும் 120,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் கொவிட் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதிலிருந்து 30பேர் உயிரிழந்துள்ளனர்.