மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான புதிய யோசனையை பகிரங்கப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மின்சாரக் கட்டணம் எவ்வளவு சதவீதம் அதிகரிக்கப்படும் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
இன்று(செவ்வாய்கிழமை) நண்பகலுக்குள் அரசாங்கம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடத் தவறினால், உத்தேச அதிகரிப்புக்கு எதிராக மக்களைத் திரட்டுவோம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.