உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணம் பெறுவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சினால் விடுக்கப்பட்ட கடிதம் மீள பெறப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
மறு அறிவித்தல்வரை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கவேண்டாம் என சகல மாவட்டச் செயலாளர்களுக்கும் நேற்றைய தினம் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன.
இந்தநிலையில் நேற்றிரவு குறித்த உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன தெரிவித்துள்ளார்.