பிருத்வி-II ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
ஒடிசாவின் கடற்கரைப் பகுதியான சந்திப்பூரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை இந்தியாவின் அணுசக்தி தடுப்பில் ஒருங்கிணைந்த பகுதி என்றும்இ சோதனையின் போது துல்லியமாக அதன் இலக்கை தாக்கியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்வி-II ஏவுகணை சுமார் 350 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.