அவுஸ்ரேலியாவில் கடந்த வருடம் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரில் இலங்கை அணி பங்கேற்றமை மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் குஷலா சரோஜினி வீரவர்தன, அமைச்சர் செஹான் சேமசிங்கவிடம் குறித்த அறிக்கையை கையளித்தார்.
அந்த அறிக்கையில், நிதி முறைகேடு, சமூக ஊடகங்களின் ஊடான பாதிப்பு, மத தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.