உக்ரைனில் உள்ள ரஷ்யாவின் உயர்மட்ட தளபதி செர்ஜி சுரோவிகின், பதவியேற்ற மூன்றே மாதங்களில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான சமீபத்திய மிருகத்தனமான தாக்குதல்களை மேற்பார்வையிட்ட செர்ஜி சுரோவிகினுக்குப் பதிலாக, பொதுப் பணியாளர்களின் தலைவர் வலேரி ஜெராசிமோவ் ஜனாதிபதி விளாடிமீர் புடினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வலேரி ஜெராசிமோவ், சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு தலைமை தாங்குவார் என புடின் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு முதல் பதவியில் இருக்கும் ஜெனரல் ஜெராசிமோவ், சோவியத்துக்கு பிந்தைய காலத்தில் மிக நீண்ட காலம் பணியாற்றிய பொதுப் பணியாளர்களின் ரஷ்யத் தலைவராக உள்ளார்.
சிரியாவில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் குறிப்பாக அலெப்போ நகரத்தின் மீது கடுமையான குண்டுவீச்சு உட்பட முந்தைய போர்களில் ஜனரல் சுரோவிகின் தனது மிருகத்தனமான தந்திரோபாயங்களுக்காக ‘ஜெனரல் ஆர்மகெடோன்’ என்று அழைக்கப்படுகிறார்.
ஒக்டோபரில் அவர் நடவடிக்கைக்கு தலைமை தாங்க நியமிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை அழிக்க ரஷ்யா தனது பிரச்சாரத்தைத் தொடங்கியது,