றோயல் மெயிலின் வெளிநாட்டு விநியோகங்களுக்கு கடுமையான இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
றோயல் மெயில் வெளிநாடுகளுக்கு விநியோகங்களை அனுப்ப பயன்படுத்தும் கணினி அமைப்புகளை ரன்சம்வேர் சைபர் தாக்குதல் பாதித்துள்ளது.
‘சைபர் தாக்குதல்’ காரணமாக வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படும் என றோயல் மெயில் புதன்கிழமை முதல் எச்சரித்து வருகிறது.
இப்பிரச்சினை தீரும் வரை மக்கள் சர்வதேச கடிதங்கள் மற்றும் பொதிகளை அனுப்ப முயற்சிக்க வேண்டாம் என்பதே அதன் சமீபத்திய அறிவுரை ஆகும்.
தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ரன்சம்வேர் ‘லாக்பிட்’ என்று விசாரணைக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுடன் தொடர்புள்ள கிரிமினல் கும்பல்களால் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கணினி பாதுகாப்பு நிறுவனங்கள் கூறுகின்றன.