மலையாள திரையுலகில் அங்கமாலி டைரிஸ், இ மா யு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கிய இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி, நடிகர் சூர்யாவுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி, சமீபத்திய செவ்வியொன்றில், நடிகர் சூர்யாவுக்காக ஒரு கதையை தான் உருவாக்கியுள்ளதாகவும் சூர்யாவிடம் அதை கூறியபோது அவருக்கும் ரொம்பவே பிடித்துப்போய் இந்த கதையை நாம் செய்வோம் என கூறியதாகவும் கூறியுள்ளார்.
அதேசமயம், சூர்யாவின் கைவசம் ஏற்கனவே உள்ள படங்கள் மற்றும் சில காரணங்களால் இந்த படம் தள்ளிப்போய்க் கொண்டிருப்பதாகவும் நிச்சயமாக விரைவில் சூர்யாவிடமிருந்து அழைப்பு வரும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
தற்போது, மம்முட்டி தனது சொந்த தயாரிப்பில் தானே கதாநாயகனாக நடிக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்கிற படத்தை இயக்கும் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி, அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்கிற படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


















