உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இன்று (செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த பரீட்சையுடன் தொடர்புடைய கையேடுகளை விநியோகித்தல், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் நடாத்துதல் என்பனவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவற்றை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அது தொடர்பாக தகவல் இருந்தால் பரீட்சை திணைக்களத்தின் 1911 என்ற உடனடி தொலை பேசி இலக்கமான 0112 785212 அல்லது 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.