சபாநாயகர் தலைமையில் இன்று(புதன்கிழமை) முக்கிய கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டமூலத்தை நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியும் பங்கேற்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதன்போது கட்சித் தலைவர்களின் ஒருமித்த இணக்கப்பாடு கிடைக்கும் பட்சத்தில் நாளை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும், அது தொடர்பாக அமுலுக்கு வரும் சட்டங்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தாக்கம் செலுத்தாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.