விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் இன்று காலை அறிவித்தார்.
கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று பிற்பகல் நடைபெறவிருந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தை இரத்துச் செய்ததன் பின்னரே இந்த விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.