வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் “ஈழமக்கள் ஜனநாயக கட்சி வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கின்றோம். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா நகரசபை மற்றும் தெற்கு தமிழ் பிரதேச சபை ஆகியவற்றில் போட்டியிட்டிருந்தோம்
இம் முறை மக்களுக்கு ஆற்றிய சேவையின் அடிப்படையில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணங்களையும் செலுத்தியியுள்ளோம் ” எனவும் குறிப்பிட்டிருந்தார்.