தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் வடிவேலுவின் தாயார் காலமானார்.
மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று (புதன்கிழமை) இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
87 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது மறைவுக்கு திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.