உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) செலுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க உள்ளிட்டவர்கள் இணைந்து இந்த கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.