ஈஸ்டர் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் உண்மையைக் கண்டறியவும் நீதியை உறுதிப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீடுகளை வழங்குமாறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்யுமாறும், அவர்களும் அவர்களது பிரதிநிதிகளும் நிதியை வழங்குவதில் முழுமையாக கலந்தாலோசிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் பற்றிய முந்தைய விசாரணைகளின் முழுமையான கண்டுபிடிப்புகளை வெளியிட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்மி லோரன்ஸ் வலியுறுத்தினார்.


















