இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், இலங்கையில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இளம் அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வசமிருந்த சாதனையை ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க 1977 ஆம் ஆண்டு தனது 29 வயதில் இலங்கையின் இளம் அமைச்சரவை அமைச்சராக பதவியேற்றதே சாதனையாக இருந்தது.
இந்தநிலையில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜீவன் தொண்டமான் நேற்று நியமிக்கப்பட்டார்.
ஜீவன் தொண்டமான் தனது 28வது வயதில் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து, இலங்கையின் இளம் அமைச்சரவை அமைச்சராக வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார்.