பிரித்தானியாவில் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதி பிரித்தானியா தமிழ் மரபுரிமைச் சங்கத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பாரம்பரிய தமிழ் கலை நிகழ்ச்சிகள், குழு விவாதங்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் மற்றும் அனைவரும் பங்கு பற்றக்கூடியதான தமிழ் புதிர்களைக் கொண்டதாக பல நிகழ்வுகள் அங்கு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இளையோர் மன்றங்களும், தமிழ் மரபுத்திங்கள் கொண்டாட்டங்களின் எதிர்காலத்திற்கான கருத்துக்களை முன்வைக்கும் வகையில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.