உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது, பிற்போடுவது தொடர்பான தீர்மானத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேர்தல் நடவடிக்கையில் அரசாங்கம் தலையிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை பிற்போடும் நோக்கில் தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் இயற்றப்படவில்லை எனவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஊடாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் சூழ்ச்சி செய்வதாக அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படுகிறது.
தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாஙடகத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.