பின்வாசல் வழியாக அரசின் ஆட்சியை முன்னெடுக்கும் ராஜபக்சவினருக்கு இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பில் அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், அதனை ஒத்திவைக்க பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த முயற்சி இன்னும் முடியவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ராஜபக்சவினருக்கும் மறக்க முடியாத பாடத்தை மக்கள் புகட்டுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


















