ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான காலிறுதிப் போட்டியில், ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.
ஆண்களுக்கான முதல் காலிறுதிப் போட்டியில், ரஷ்யாவின் கரேன் கச்சனோவ், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், கரேன் கச்சனோவ், 7-6, 6-3, 3-0 என்ற செட் கணக்கில் கரேன் கச்சனோவ் முன்னிலைப் பெற்றிருந்த போது, செபாஸ்டியன் கோர்டா உபாதைக் காரணமான போட்டியின் இடைநடுவே வெளியேறினார்.
இதனால், ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு அவர் காலிறுதிக்கு முன்னேறினார்.