இன்னும் சில தினங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக நாளை(புதன்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு சபை கூடவுள்ளது.
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக தேர்தலினை ஒத்திவைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுவதாக சில அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இது தவிர ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அடுத்த சில நாட்களில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
அரசியலமைப்பு பேரவைக்கு பிரதான எதிர்க்கட்சியல்லாத ஏனைய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் நாளை நடைபெறும் கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.