பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு தயார் இல்லை என்றால் அவர்கள் தேர்தலில் இருந்து தாராளமாக விளகிக் கொள்ளலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாவல பகுதியிலுள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ள நிலையில் தேர்தலை பிற்போட ஏதேனும் புதிய வழிமுறை இல்லையா என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது எனவும் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் இல்லாத நாட்டில் ஜனநாயகம் இல்லை, நாட்டு மக்களின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை தேர்தல் ஊடாகவே விளங்கிக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு மக்களாணை கிடையாது எனவும் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது எனவும் சரித ஹேரத் கூறியுள்ளார்.
மக்களின் அரசியல் நிலைப்பாடு எத்தன்மையில் உள்ளது என்பதை இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக சர்வதேசம் விளங்கிக் கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தேர்தலுக்கு தயார் இல்லை.
பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு தயார் இல்லை என்றால் அவர்கள் தேர்தலில் இருந்து தாராளமாக விளகிக் கொள்ளலாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
69 இலட்சம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மக்களால் பதவி நீக்கப்பட்டார். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
மக்களாணை தொடர்பில் பாரிய சிக்கல் நிலை காணப்படுகிறது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.