இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் ‘மிக முக்கியமானவை’ என பென்டகன் வலியுறுத்தியுள்ளது.
பென்டகனின் ஊடக செயலாளர் விமானப்படை பிரிக் ஜெனரல் பாட் ரைடர் செய்தியாளர் சந்திப்பில், கருத்துவெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
‘உங்களுக்குத் தெரியும், பாதுகாப்பு ஒத்துழைப்பு என்று வரும்போது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கு இடையிலான உறவு முக்கியமானது.
எனவே இந்தியத் தலைமையுடன் தொடர்ந்து ஈடுபடுவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.’ என்றார்.
அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு கூட்டாளியாக இந்தியா நியமிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளுடன் இணையாக இந்தியா பார்க்கப்படுகின்றது.
இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு கூட்டாளர் அந்தஸ்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தின் பிரகாரம் 2017 இல் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நேட்டோ அல்லாத நட்பு நாடான இந்தியாவுக்கு மட்டும் தான் இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் பாதுகாப்பு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பப் பகிர்வுகளை அதன் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளுக்கு இணையான அளவில் எளிதாக்கவே அமெரிக்கா இவ்வாறான அந்தஸ்தை வழங்கியுள்ளது.
பாதுகாப்பு வர்த்தகம், கூட்டுப் பயிற்சிகள், பணியாளர்கள் பரிமாற்றங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடற்கொள்ளைக்கு எதிரான ஒத்துழைப்பு ஆகியவற்றில் தீவிரப்படுத்துதல் ஆகியவற்றுடன் இந்தியா -அமெரிக்க மூலோபாய கூட்டுறவு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சீனாவும் ரஷ்யாவும் இணைந்து புதிய இரசாயன ஆயுதங்களை உருவாக்குவது குறித்தும் ரைடர் கருத்து தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள திறன்களைப் பொறுத்தவரை, அவற்றை எமது பாதுகாப்புத்துறை மிகவும் நெருக்கமாகக் கண்காணிக்கின்றன.
ரஷ்யா மற்றும் சீனாவுக்கு வரும்போது, நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்போம் என்று அவர் கூறினார்.
வடகொரியாவும் இந்த இரசாயன ஆயுதங்களை ரஷ்யா மற்றும் சீனாவுடன் பகிர்ந்துகொள்ளுமா என்ற பதிலளித்த அவர், ‘நாங்கள் உன்னிப்பாகக் கவனிக்கப் போகிறோம், பிராந்தியத்தில் உள்ள எங்கள் நட்பு நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தப் போகிறோம்.
இரசாயன உயிரியல் ஆயுதங்கள் போன்ற விடயங்களுக்கு வரும்போது விதிமுறைகள் பற்றி கவனம் செலுத்துவோம் என்றார்.
தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வருவதாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அவர், பாகிஸ்தானின் உள்அரசியலில் ஈடுபடாமல், ஆப்கானிஸ்தானுக்குள்ளும், பிராந்தியம் முழுவதிலும் பயங்கரவாத அமைப்புகள் இருப்பதை நாங்கள் நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம். நிச்சயமாக அதில் யாருக்கும் ஆச்சரியம் இல்லை.
ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான துறைமுகமாக மாறக்கூடாது.
எல்லை தாண்டிய திறனைப் பேணுகிறோம். பயங்கரவாதம் உள்ளிட்டவற்றிலிருந்து எமது சொந்த மற்றும் இதர தாயகத்தைப் பாதுகாப்பதில் தொடர்ந்து உறவுகளைப் பேணுவோம் என்றார்.