அமெரிக்காவில் காணாமல் போன பிரித்தானிய நடிகர் ஜூலியன் சாண்ட்ஸை தேடும் பணியை மீண்டும் தொடங்கியுள்ளதாக கலிபோர்னியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க மாநிலம் கொடிய புயல்களால் தாக்கப்பட்டதால், முந்தைய முயற்சிகள் பாதகமான வானிலையால் தடைபட்டன.
இந்தநிலையில் புது உத்வேகத்துடன் 65 வயதான ஜூலியன் சாண்ட்ஸை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த 13ஆம் திகதி காணாமல் போனதில் இருந்து எந்த அறிகுறியும் இல்லை.
லொஸ் ஏஞ்சல்ஸின் வடக்கே சான் கேப்ரியல் மலைகளின் பால்டி பவுல் பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட போது, சாண்ட்ஸ் காணாமல் போனார்.
சான் பெர்னார்டினோ கவுண்டி ஷெரிப் துறையானது, கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் இருந்து ஹெnலிகாப்டரைப் பயன்படுத்துவதாக டுவீட் செய்தது.
புதன்கிழமை, அதே பகுதியில் காணாமல் போன இரண்டாவது மலையேறுபவர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக ஷெரிப் துறை கூறியது. அவர் 75 வயதான லொஸ் ஏஞ்சல்ஸ் குடியிருப்பாளர் ஜின் சுங் என உள்ளூர் ஊடகங்கள் பெயரிட்டன.
கடந்த வாரம் இப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவுகள் மிஸ்டர் சாண்ட்ஸிற்கான தரைத் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.