தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, வாக்காளர் ஒருவர் சார்பாக வேட்பாளர் செலவு செய்யும் தொகையை அதிகரிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய தொகையை 15 ரூபாயாக நிர்ணயம் செய்ய தேர்தல் ஆணைக்குழு அண்மையில் தீர்மானித்திருந்தது.
எனினும், குறித்த தொகையினை தற்போது 20 ரூபாயாக அதிகரிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.