அமெரிக்காவின் மத்திய தகவல் பணியகத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் நியூயோர்க்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் பலம் வாய்ந்த வர்த்தகர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் Charles McGonigal என்ற குறித்த முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள Charles McGonigal கடந்த 2018ஆம் ஆண்டு சிஐஏவில் இருந்து ஓய்வு பெற்றார்.
கடந்த சனிக்கிழமை அவர் இலங்கைக்கு விஜயம் செய்து நாடு திரும்பும் போது நியூயோர்க்கில் உள்ள ஜோன் எப் கென்னடி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.