கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு ஜெப ஆலயத்தில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, மூன்று பேர் காயமடைந்தனர்.
உள்ளூர் நேரப்படி சுமார் 20:15 மணிக்கு நகரின் நெவ் யாகோவ் சுற்றுப்புறத்தில் இந்த சம்பவம் நடந்தது.
தாக்குதல் நடத்தியவரை பயங்கரவாதி என்று பொலிஸார் விபரித்தனர். உள்ளூர் ஊடகங்கள் அவரை கிழக்கு ஜெருசலேமைச் சேர்ந்த பாலஸ்தீனியர் என அடையாளம் கண்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேலிய பொலிஸ் ஆணையாளர் கோபி ஷப்தாய், ‘சமீபத்திய ஆண்டுகளில் நாங்கள் சந்தித்த மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்று’ என்று கூறினார்.
யூதக் குடியேற்றத்தில் உள்ள ஒரு ஜெப ஆலயத்தில் பிரார்த்தனைக்காக இஸ்ரேலிய வழிபாட்டாளர்கள் கூடிய போது இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் துப்பாக்கிதாரி ஓட்டியதாகத் தோன்றும் வெள்ளை நிற கார் குறித்து தடயவியல் குழு விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.