75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச கண்காட்சியொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம், மத்திய கலாசார நிதியம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் அருங்காட்சிய திணைக்களம் ஆகியவை இணைந்து இதனை நடத்தத் திட்டமிட்டுள்ளன.
இதற்கமைய, பெப்ரவரி 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் தேசிய அருங்காட்சியகத்தில் குறித்த கண்காட்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அரிய பல விடயங்களை மக்களுக்கு கண்டுகொள்ள முடியுமெனவும் பௌத்த சமய அலுவல்கள் மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.