2024ஆம் ஆண்டு பரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்கை 40 நாடுகள் வரை புறக்கணிக்கலாம் என போலந்தின் விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சர் கமில் போர்ட்னிசுக் எச்சரித்துள்ளார்.
இதனால், உலகின் மிக்பெரிய விiளாட்டுத் தொடரான ஒலிம்பிக் அர்த்தமற்றதாக ஆகிவிடுமென அவர் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கு முன்னர் சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் திட்டங்களைத் தடுப்பதற்கு ஆதரவளிக்க பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட 40 நாடுகளின் கூட்டணியை உருவாக்க முடியும் என்று தான் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.
பரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யர்களையும் பெலாரசியர்களையும் போட்டியிட அனுமதிக்கும் சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் முடிவிற்கு பிறகு போலந்து, லிதுவேனியா, எஸ்டோனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள் இந்த முடிவினை எடுத்துள்ளன.
முன்னதாகவே ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் போட்டியிட அனுமதித்தால் 2024 பரிஸ் தொடரை புறக்கணிப்பதாக உக்ரைன் மிரட்டல் விடுத்தது.
ஆனால், எந்தவொரு புறக்கணிப்பும் விளையாட்டு வீரர்களை மட்டுமே தண்டிக்கும் என சர்வதேச ஒலிம்பிக் ஆணையம் கூறியுள்ளது.